Skip to main content

மலேசிய இந்துதர்ம மாமன்ற பாடல்

 

எங்கள் மதமிது எங்கள் தர்மம்

இந்து சமயமிது உன்னத சமயமிது ×2

யுகயுகமாய் நம் சமயத்தில் வளர்ந்தோம்

பல்வகை வளத்தை இதில் குவித்தோம்

பொன்மய தர்மம் என்றே உலகோர்

பாடித் துதித்திட ஓங்கி உயர்ந்தோம்

வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கி

கரங்கள் சிவந்தனவே

உள்ளம் மகிழ்ந்ததுவே (எங்கள் மதமிது)

தாய் மதமிது நம் தந்தையர் சமயம்

தியாகியர் பலரும் வாழ்ந்த சமயம்

பாருக்கெல்லாம் நல்வழி காட்ட

பரமன் படைத்த மங்கள சமயம்

அனுதினம் இதனைப் போற்றி வணங்கும்

அன்பர்கள் ஆகிடுவோம்

பக்தர்கள் ஆகிடுவோம் (எங்கள் மதமிது)

நல்லோர் நம்மில் பிறந்திட எங்கும்

நிகரில்லா நல்வாழ்வு சமைத்தோம்

தியாகம் யோகம் தூய்மை பயின்றோம்

மாசுகளில்லா பண்பு வளர்த்தோம்

புனிதர் வாழும் புண்ணிய சமயம்

புவியில் இணையுண்டோ

இதற்கோர் ஈடுண்டோ...

வேதத்தை ஓதி மெய்ப்பொருள் காண்போம்

வாய்மையை உணர்த்தி மேன்மையடைவோம்

இறைவன் நாமம் நெஞ்சில் வாழும்

செய்தொழில் எல்லாம் வழிபாடாகும்

மக்கள் துயரம் துன்பம் துடைக்கும்

தொண்டுகள் செய்திடுவோம்

பிறவிப்பயன் பெறுவோம் (எங்கள் மதமிது)

 

Comments

Popular posts from this blog

Teachers Biography

Mr Sadheesh Kumar @ Kuang Leong Yee, VAGEESAR TAMIL SCHOOL, 45000 KUALA SELANGOR, SELANGOR DARUL EHSAN, MALAYSIA Mobile Number: +60123819415 / +60184697707 School Contact Number : +60332896736 e-mail add : satiskspk@gmail.com

Sadheesh Maths Youtube channel

NO TAJUK / TITLE PAUTAN / LINK பொது ( ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ) 1. கணிதம் போதிக்கும் முறைகள்   https://youtu.be/5Q6BOCEYNVo   2. கணிதம் எப்போது தப்பாகிறது | WHEN THE MISCONCEPTION OCCURS IN MATHEMATICS https://youtu.be/DblkQEn0n9w   3. கணிதம் எப்போது தப்பாகிறது ? பகுதி 2 | WHEN THE MISCONCEPTION OCCURS IN MATHEMATICS? PART 2 https://youtu.be/8C-siWGYy6M   4. கணிதம் எப்போது தப்பாகிறது ? பகுதி 3 பெருக்கல்  | WHEN THE MISCONCEPTION OCCURS IN MATHEMATICS? PART 3 MULTIPLICATION https://youtu.be/r4LCQV1TRHo   5. கணிதம் எப்போது தப்பாகிறது ? கிட்டிய மதிப்பு  | WHEN THE MISCONCEPTION OCCURS IN MATHEMATICS? ROUND OFF NUMBERS https://youtu.be/v_FVFjPgmPw   6. கணிதம் எப்போது தப்பாகிறது...

How to proof the shape of square